சென்னை: மகேந்திர சிங் தோனி, ஒரு தேசத்தின் தலைவரைப் போன்றவர் என புகழ்ந்துள்ளர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்பு இடம்பெற்றிருந்தார் இந்த மேத்யூ ஹைடன். சென்னை அணியை மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்த வந்துள்ள தோனியை, அவர் வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தோனி ‘கிரிக்கெட்டின் யுகம் போன்றவர்’ என்றும், கிட்டத்தட்ட ஒரு நாட்டிற்கே தலைவரைப் போன்றவர் என்றும் பாராட்டியுள்ளார்.

“அவர் எப்படி தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்கிறார், அவர் எப்படி கேட்ச் பிடிக்கிறார், அணியினரை எப்படி கையாள்கிறார் உள்ளிட்ட விஷயங்களை நீங்கள் பாருங்கள். அவற்றை நாம் நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்” என்றுள்ளார்.

[youtube-feed feed=1]