
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை ஈட்டியது. ஆனால் படம் வெளியாகி 15 நாட்களிலேயே அமேசான் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமேசான் தளத்தில் வெளியான பிறகும் நேற்று தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை என அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
கிராமப்புறங்களிலும் சிங்கிள் தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வளவு கஷ்டத்திலும் மாஸ்டர் படம் இவ்வளவு பெரிய வசூல் செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
[youtube-feed feed=1]