இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் 13 ஆம் தேதி கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் கேரளா விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#MasterFilm to get wide release in #Kerala!
First time ever! All the screens that will reopen (almost 80% of 600 odd screens in the state) will screen #MasterFilm. #Exhibitors in #Kerala feel #ThalapathyVijay stood with them and showed the world importance of #theatrical! pic.twitter.com/sMz3vGN6e3— Sreedhar Pillai (@sri50) January 11, 2021