லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர் .பல கோடி வியாபாரம் கொண்ட ‘மாஸ்டர்’ படம் கொரோனாவால் தியேட்டரில் வெளியாக சூழல் ஏற்பட்டிருப்பதால் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்னும் வருத்தமடைந்தார்கள்.

இந்த நிலையில், மே மாதம் இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். காரணம், விஜயின் ‘மாஸ்டர்’ எப்போது ரிலீஸ் செய்தாலும், மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று சில விநியோகஸ்தர்கள் கணித்துள்ளதால், இழப்பை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு ’மாஸ்டர்’ லாபம் கொடுக்கும் என்பது தானாம்.

[youtube-feed feed=1]