சென்னை:

மிழகத்தில் மாபெரும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது, அதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி அரசு  மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை போக்க, அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு யாகங்களை செய்து வரும் நிலையில், திமுகவினரோ, தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  30 ஆண்டுகளுக்குப் பின் மாபெரும் குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தவர், தமிழக மக்களின் தண்ணிர் தேவை குறித்த  தமிழக அரசு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை எடுக்‍காததே இன்றைய நிலைமைக்கு  காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,எங்களை லெட்டர்பேடு கட்சி என்று விமர்சிப்பவர்கள், எங்களது கட்சியினரை பொய் சொல்லி, ஏமாற்றி அவர்களது கட்சியில் இணைக்கின்றனர், ஆனால் அவர்களும் மீண்டும் எங்களது கட்சிக்கு வந்து விடுகின்றனர் என்றும் நக்கலாக கூறினார்.