வரலாறு காணாத அளவில் ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் இருப்பதால் 44பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனல்பறக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் குள்ரிச்ச்சியான இடங்களை தேடி தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

australia

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டி பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகமாகவே உள்ளது. அடிலெய்டின் வடக்கு பகுதியில் நேற்றைய அளவின்படி 49.5டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் பதிவாகியுல்ளாது. இது 1939ம் ஆண்டு இருந்த வெப்பத்தின் தாக்கத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 13நகரங்களில் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளான. கடுமையான இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிபதற்காக மக்கள் மர நிழல்களிலும், குளிர்ச்சியான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்க மக்களுக்கு குளிர்ச்சியான பீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

வெப்பக்காற்றின் தாக்கத்தினால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு, வெப்ப நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். இதுவரை 44பேர் வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி கடும் வெப்பக்காற்றுக்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் 90 குதிரைகள் இறந்துள்ளன.

காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.