பெங்களூரு: பெங்களூருவில் தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் நபர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை பின்பற்றாமல் செல்பவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் இந்த அபராதத்துக்கு விலக்கு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் வாகன ஓட்டிகள் மாஸ்க் அணிவதில் சில தளர்வுகளை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. அதன்படி, வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் , முகக்கவசம் அணிய தேவையில்லை.

காரில் ஓட்டுநருடன், மற்றவர்கள் இருந்தால் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், மாஸ்க் அணியவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.