மதுரை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால், பொதுஇடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என தமிழகஅரசு வலியுறுத்தி வருகிறது. பள்ளிகளில் முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை வளாகம் மற்றும் நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வழக்குகளில் தொடர்பு இல்லாத வர்கள் உயர் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்  இது வரும்  20 முதல் அமலுக்கு வருகிறது  உயர்நீதிமன்ற நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டு உள்ளார்.