திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகனான எம்பெருமான் குமரவிடங்கப்பெருமான் தோற்றத்தில் வள்ளி, தேய்வயானை சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வானது பிப்ரவரி 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. 8-ம் திருவிழாவான சனிக்கிழமை பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை யுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான அன்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடைபெற்றது.
நேற்று (மார்ச் 6ந்தேதி) 10ம் திருவிழாவையொட்டி, காலை, பிரமாண்டமான தேரோட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷடத்துடன், தேவரை வடம் பிடித்து இழுத்துச்சென்று, முருகனின் ஆசி பெற்றனர்.
அதைத்தொடர்ந்து, சுவாமி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத குமரவிடங்கப்பெருமான் பெரியபல்லக்கிலும் ஸ்ரீ தெய்வானை அம்பாள் சிறியபல்லக்கிலும்
எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்,. பல ஆயிரம் பக்தர்கள் முருகபெருமான் சந்தித்து ஆசி பெற்றனர்.
இன்று 11-ம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து மற்ற கால பூஜை நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.