சென்னை: விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில், அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், எச்.ராஜா அதிமுகவை ஆண்மையான அரசா என கிண்டலடித்த நிலை யில், அமைச்சர் ஜெயக்குமார்,. அது அவருக்குத்தான் பொருந்தும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த குடுமிபிடிச் சண்டை விவகாரம் சமூகவைலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், அரசின் தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் இந்து அமைப்பினர் முதல்வரை சந்தித்து, விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால், தமிழக முதல்வர் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விநாயகர் சிலை வைத்து வழிபட மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் . இந்த நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்துமுன்னணி அறிவித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில்,
கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு. என பதிவிட்டுள்ளார்.
இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக சார்பில், அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் பதிடியாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்…
என்று பதிவிட்டார். இதனால் அதிமுக-பாஜக இடையே சமூக வலைதளங்களில் வார்த்தை போர் அதிகரித்தது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்தவர், ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும் தடாலடியாக கூறினார். அதிமுகவினரை பாஜகவின் ஹெச்.ராஜா உரசி பார்க்கக்கூடாது என்று எச்சரித்தவர், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கூனிக்குறுகி நின்றவர் அவர்தான், என்றும், அட்மின்தான் டிவிட்டரில் பதிவு போட்டார் என்று சொன்னவர் என்று ஏளனம் செய்தார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு முந்தைய காலத்தில் காத்துக்கிடந்தது யார் என எல்லோருக்கும் தெரியும் என்று கூறயிவர், கொரோனாவின் தாக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதை தமிழகத்தோடு ஒப்பிடக்கூடாது. கொரோனா பரவும் சூழல் உள்ளதாலேயே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஒரு டிவிட்டர் பதிவை போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் ஹெச்.ராஜா . வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக பாஜக இடையேயிலான குடுமிபிடிச் சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.