லிமா :
பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பதவி ஏற்றார்.
முன்னாள் அதிபர் குஸ்கின்ஸ்கி பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மார்டின் விஸ்காரா தேர்ந்தெடுக்கப்பட்டாடார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி குஸ்கின்ஸ்கி பான் லத்தீன் அமெரிக்கா ஓடேரெச்ச்ட் ஊழல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியான தென் அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட மார்டின், நேற்று அதிபராக பதவி ஏற்றார். நாட்டில் ஊழலை ஒழிப்பதே தனது முதல் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.