ரியோ நகரில் நடைபெற்ற பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மாரியப்பன்.
1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படித்தை மாரியப்பன்,, நிஜயமாகவே ஒரு சாதனையாளர்தான்.
மது போதையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர், மாரியப்பன் தங்கவேலு மீது மோதினார். அந்த விபத்தில் கால்களை இழந்தார் மாரியப்பன். அப்போது அவருக்கு வயது ஐந்து.

சேலத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பெரியவடுகம்பட்டி என்ற சிறிய கிராமம்தான் அவரது சொந்த ஊர். பெற்றோர் தங்கவேல் – சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். மிக ஏழ்மையான குடும்பம். மாரியப்பனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய 3 லட்ச ரூபாய்க்கான கடனுக்கு இன்னமும் வட்டி கட்டி வருகிறார் தங்கவேலு.
போட்டிகளில் கலந்துகொள்ள மாரியப்பனுக்கு உதவியாக இருந்தது அவரதுஊர் மக்கள்தான்.
பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பணம் இல்லாமல் தவித்த போது, கிராம மக்கள் உதவினர்.

“எங்கள் பெரிய வடகம்பட்டி கிராம மக்களின் உதவி மற்றும் வழிகாட்டுதல் காரணமாகவே, மாரியப்பனால், இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது” என்று நெகிழ்கிறாரர் மாரியப்பனின் தாயார். “மாரியப்பன் தங்கம் வென்றதை அடுத்து, கிராமமே தீபாவளி பண்டிகை போல கொண்டாடுகிறது” என்கிறார் அவர்.
பெங்களூரு போட்டியில் கலந்துகொள்ள ஊர் மக்கள் உதவினார்கள். அதேநேரம், 2012ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் கலந்துகொள்ள போதிய உதவி கிடைக்கவில்லை. காரணம் அதற்கு பெரும் தொகை தேவைப்பட்டது. எளிய கிராமத்து மக்களால் அந்த அளவு உதவி செய்ய முடியாத நிலை.
இப்போது தமிழக அரசு மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு அறவித்திருக்கிறது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு 70லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
விளையாட்டில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் மீது, அவர்கள் வென்ற பிறகு வெளிச்சம் காட்டுவதை விட, ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு வழி காட்டினால் ஆயிரமாயிரம் மாரியப்பன்கள் வெல்லத் தயாராக இருக்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel