சென்னை :

மூக இடைவெளி காரணமாக புதுப் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கல்யாணம் நடைபெற்று வருகிறது.

ஆடம்பரமாக பலநூறு பேர்களுக்கு விருந்துவைத்து நடத்தப்படும் கல்யாணங்கள் குறைந்து போய், கொரோனா காரணமாக 50 – 100 பேர் மட்டுமே பங்கேற்கும் கட்டுப்பாடான கல்யாணம் அதிகரித்திருக்கிறது.

வயதானவர்களும், வெளியூரில் உள்ளவர்களும் வீட்டில் இருந்தே இணையதளம் வாயிலாக வீடியோ மூலம் கல்யாணத்தை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது, அதிலும் ஒரு புதுமையாக, அழைப்பிதழிலேயே கல்யாணம் ஒளிபரப்பாகும் இணையதள முகவரி அச்சடிக்கப்பட்டு, அழைப்பாளர்களுக்கு கல்யாண சாப்பாடு வீடு தேடி செல்லும் வகையில் ஏற்பாடுகள் கனஜோராக நடக்கிறது.

இதுபோன்ற ஒரு அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது, இதுகுறித்து பேசிவரும் நெட்டிசன்கள் சாம்பார் கூடுதலாக தேவைப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டு வருகிறார்கள்.

வேறு சிலரோ, பல்வேறு ஊர்களில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விருந்தினர்களுக்கு எப்படி நேரத்துக்கு சாப்பாடு அனுப்பிவைப்பார்கள் என்று கேள்வி எழுப்புவதுடன், சமூக இடைவெளி என்பது சமூகத்தில் இடைவெளியை ஏற்படுத்தி விடுமோ என்றும் அச்சத்துடன் கேட்கின்றனர்.

எது எப்படியோ இவர்கள் தரும் மெனுவில் உள்ள புளியஞ் சாதமும், மோர் குழம்பும் பிடிக்காத, கல்யாண விருந்தென்றாலே அசைவம் தான் என்றிருக்கும் தென்னாட்டு அசைவ பிரியர்களுக்கு என்று வேறு மெனு உண்டா என்பது தெரியவில்லை.