சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளில் மெரினாவுக்கு தனி பங்குண்டு. உலகின் இரண்டாவது நீண்ட நகர்ப்புற கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும், இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும், உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் கருதப்படுகிறது. இது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு நீண்டுள்ளது, மேலும் இது சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாகும்.
ஆனால், இந்த கடற்கரையில் ஆக்கிரமித்துள்ள தலைவர்களின் கல்லறைகளும், சிறு கடைகளும், சிறு வியாபாரிகளும் அங்கு மக்கள் வந்து இயற்கைஅழகை ரசிப்பதை தடுக்கும் நிலையே உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற மக்கள் தங்களது, பொழுதை போக்க, பெரிய பொருட்செலவு தராததால் கடற்கரைக்கு செல்ல மக்கள் அலை மோதுவர். அதனால் கடற்கரையில், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையில் வேறு எந்த கடைகளும் அமைக்கக் கூடாது என்று கூறி உள்ளார். மேலும், மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது என கண்டித்துள்ளது.
தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும்.
உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை; சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள். மக்கள் ரசிக்கத்தான் கடற்கரைகளே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது.
சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள நிரந்தக் கடைகளை அகற்ற வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது குறித்த வழக்குகளில் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மேலும், மெரினா கடற்கரையில் 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு அரசு ஆய்வு செய்து, எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தெரிவித்து. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி. 8ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
[youtube-feed feed=1]