குசேலர் தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை..

குசேலர் தினம் குறித்து சமூக வலைத் தளங்களில் வைரலாகும் பதிவு

 

மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று குருவாயூரப்பனுக்கு அவல் படைத்து குசேல சரித்திரத்தைப் படித்தால் செல்வம் பெருகும்…

குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமையை “குசேலர் தின’மாக கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.

அன்று ஆலயத்தில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர்.

குசேலர், கிருஷ்ணனைத் தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாகக் கொண்டாடுகின்றனர் ..

அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .

பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாகத் தருவர்.

இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிட்சம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !!!!!