தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல நாதக, தவெகவும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது. முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற அதீத நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது. மேலும், தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. கட்சி நிர்வாகிகள் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டம் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிப்பது ஒழிப்பு பணிகளில் மும்முரம் காட்டுகிறது.
இதைத்தொடர்ந்து, மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி அக்கட்சி தலைவர் விஜய் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த 2025ம் ஆண்டு செப்டம்ர் மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும்மேற்பட்டவர்சகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, விஜய்க்கு தமிழக முழுவதும் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையின் தரப்பினரிடம் இருந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் 4ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. கூட்டத்தில், ஐந்தாயிரம் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருப்பதுடன், மருத்துவ வசதி, தண்ணீர் வசதி என பல்வேறு கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது.
இநத் நிலையில், டெல்டா மாவட்டமான தஞ்சையில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே வரும் தேர்தல் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேயான போட்டி என்று கூறி வரும் விஜய், பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் பேசும்போது, திமுகவை கடுமையாக விமர்சித்தார். மக்களை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், பரப்புரைக்கு இடங்கள் சரியாக ஒதுகுவது ல்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் இந்த தேர்தல் எனக்கு மட்டும் முக்கியமானது கிடையாது. உங்களுக்கு முக்கியமானது. தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையேதான் போட்டி என்றும் கூறினார். மேலும், இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.
அவர்கள் யார் சரியான நபர் என்று தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து,அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற 4-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகிலுள்ள அய்யாசாமிப்பட்டி பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தஞ்சையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
தஞ்சாவூரில் 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர். மார்ச் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கு முன்பே தஞ்சாவூரில் விஜய் பேச திட்டமிட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப் போய், தற்போது மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிர்வாகியில் சந்திப்பை எந்தவித இடையூறும் இல்லாமல், வெற்றிகரமாக நடத்துவதற்காக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனுமதி வேண்டி மனு அளித்திருந்தனர். இந்த மனுவில் கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு வழக்கமான சில நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். விஜய் பேச போகும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
[youtube-feed feed=1]