உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம் (லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது. இன்னும் பொதுமுடக்கம் முற்றிலும் விலக்கப்படாத நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஒராண்டைநிறைவு செய்கிறது. முதலாவது ஆண்டு தினம் இன்று.
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் எனப்படும் பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், 2வது அலை, 3வது அலை என தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு (2020) நவம்பர் 17, 2020) முதன்முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் சீன நபர் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. உலக வரலாற்றில் கொரோனா எனும் பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பிய நாடாகவும் சீனாமீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள இந்த பெருந்தொற்றுக்கு இதுவரை 27,28,064 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ், என்றும் 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து செலுத்தி வருகிறது. இந்தியாவில் பெருந்தொற்று பரவலை தடுக்க மோடி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வுகானில் முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாள் இன்று…
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,815 பேர் அதிகரித்து மொத்தம் 1,15,98,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 196 அதிகரித்து மொத்தம் 1,59,790 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 22,970 பேர் குணமாகி இதுவரை 1,11,28,119 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,06,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று காலை 7 மணி வரை நாடு முழுவதும் 4,50,65,998 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி பிரதமர் மோடி, நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அறிவித்தார். முதல்கட்டமாக மார்ச் 22ந்தேதி ஒருநாள் ஜனதா ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு மக்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர் படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக,போக்குவரத்து உள்பட அனைத்து சேவைகளும் அடியோடு முடங்கின. பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடந்து சென்ற அவலங்கள் அரங்கேறியது.
ஒருசில மாதங்களுக்கு பிறகு, பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு கடந்த நிலையிலும், இன்னும் முழுமையாக நீக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் அச்சுறுத்தி வரும் பரவல் காரணமாக, பல இடங்களில் பகுதி நேர முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…