maravan-movie
கோல்டன் பீகாக் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம்தான் மறவன். முழுக்க முழுக்க மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த படம் கோடம்பாக்கத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி தமிழ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதேபோல் மலேசியாவில் ஒரு குட்டி கோடம்பாக்கம் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமகா அங்கிருந்து கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தமிழ்நாட்டுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சமீபத்தில் ஒரு மலேசிய தமிழ் படம் திரையிடப்பட்டது அந்த படத்தின் பெயர்தான் மறவன். மலேசியாவில் குழந்தைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருவதால் அந்த விஷ்யத்தை நம் கண் முன்னே ஒன்றரை மணி நேரம் திரைப்படமாக காட்டி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது மறவன் டீம்.
வாழ்க்கையில் நேர்மையாக உழத்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞன் ஒருபக்கம், தவறான வழியில் சென்றாவது சீக்கிரம் கோடீஸ்வரனாகிடனும்னு நினைக்கிற இன்னொரு இளைஞன் இந்த இருவருக்குள்ளேயும் நடக்கும் விஷயங்கள்தான் இந்த படம்.
முக்கிய குறிப்பு :- மலேசியாவில் இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லமால் Best Country Film விருதையும் வென்றுள்ளது.

[youtube-feed feed=1]