
டில்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மாறன் சகோதரர்களின் ஜாமின் மனுவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.
பிரபலமான ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தொடர்புடைய மலேசிய தொழிலதிபர்களான அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய இருவருமே மலேசியாவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், இருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், தயாநிதி மாறன் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையும் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்..
Patrikai.com official YouTube Channel