
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’.
பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ் ,நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே மோகன்லாலுடன் நடித்துள்ளது.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ஐயப்பன் நாயர், இசையமைப்பாளராக ரோனி நபேல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் தாணு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த படம் மே 13-ம் தேதி ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]