புவனேஷ்வர்: ஒடிஸாவில் மூன்று இடங்களில் ரயில்வே தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ரயில்வே ஊழியா் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த காயமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் ஆகஸ்டு 3ந்தேதி அன்று இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். ஒடிஸா-ஜாா்க்கண்ட் எல்லையில் சுந்தா்கா் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா் .
. ரயிலைக் கவிழ்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 3 இடங்களில் தண்டவாளங்களில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனா். ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்த வெடிகுண்டு தாக்கல் நடைபெற்ற நேரத்தில் ரயில்கள் ஏதும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது முதலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ரயில்வே ஊழியா் எதாவா ஓரம் (37) உயிரிழந்தாா். மற்றொரு ஊழியா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனா். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அதே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன. இதில் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ‘தியாகிகள் தினத்தை’ அனுசரிக்க மாவோயிஸ்ட் அமைப்பினா் அழைப்பு விடுத்த நிலையில், அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனா். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த ரயில்வே ஊழியருக்கு ஒடிஸா மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.