லண்டன்: வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்தில் 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள் & மருத்துவப் பணியாளர்களின் திறன் மேபாட்டிற்காக, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்குமான ஒப்பந்தம், தொற்று நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் டிராபிக்கல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கையில் கையெழுத்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் என்பவையே அந்த 3 ஒப்பந்தங்கள்.
இவை அனைத்துமே சுகாதாரத்துறை சார்ந்த ஒப்பந்தங்கள். ஆனால், லண்டனிலுள்ள தொழிலதிபர்கள் இந்த ஒப்பந்தங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறார்கள்.

கிங்க்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் என்பது இங்கிலாந்து அரசின் உதவியுடன் செயல்படும் ஒன்று. அதேசமயம், சமீப காலங்களில் அந்நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே, நிலைமை இப்படியிருக்கையில், எப்படி அந்நிறுவனம் தமிழகத்தில் தனது கிளையைத் துவங்க, தமிழக அரசுடன் கையொப்பமிடும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.

இப்படியான பல சந்தேகங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்பந்தம் எழுப்பும் வகையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் ஆந்தை ரிப்போர்ட்டர் என்ற வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இவை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு http://www.aanthaireporter.com/tn-cm-edappadiyar-first-deal-in-london-lots-of-doubts/ என்ற இணைப்பிற்கு செல்லவும்.