நெல்லை
மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த செட் தகுதித் தேர்வை தள்ளி வைத்துள்ளது.

மாநில ஆவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘செட் ‘ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்தில் ‘ ‘செட் ‘ தேர்வை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ”செட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றது.
பல்கலைக்கழக நிர்வாகம் ‘செட் ‘தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]