சென்னை,
அதிமுக வழக்கறிஞர் குழு தலைவர் மனோஜ் பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது,
சசிகலாவை 2011ம் ஆண்டு வீட்டை விட்டு அனுப்பும் முன்னர் 2011ம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி என்னிடம் 45 நிமிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் நான் முதல்வராக இருக்கிறேன். ஆனால், என்னிடம் உள்ள ஒரு பெருங்கூட்டம் என்னை கொலை செய்ய சதி செய்துகொண்டிருக்கிறது. அவர்களை விரைவில் வீட்டை விட்டு வெளியேற்ற போகிறேன் என்றார்.
அதைத்தொடர்ந்து டிசம்பர் 19ந்தேதி சசிகலா உள்பட அனைவரையும் வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியேற்றினார்.
‘அதைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆன என்னை அழைத்து ஆலோசனை நடததினார்.
பின்னர் சிறிது காலம் கழித்து சசிகலா மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார்.
ஜெயலலிதா என்னை போன்ற 5 பேரை அழைத்து பேசினார்கள் ,அப்போது என்னிடம், நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கு ஒரு உதவியாளர் தேவை.. எனவேதான் அவரை மீண்டும் வரவழைத்துள்ளேன் என்றார்.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை துக்ளக் சோவுடன் இருந்தபோது, ஜெயலலிதா, சசிகலா கும்பல் எனக்கு பாய்சன் கொடுத்து கொன்றுவிடுமோ என்று பயமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை கூறியதாக மனோஜ்பாண்டியன் கூறினார்.