பானஜி:

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவையொட்டி அரசு துக்க தினமாக நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.
மனோகர் பாரிக்கரின் உடல் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

சிறந்த மனிதர், நேர்மையாளர் என அறியப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி உட்பட பாஜக மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து பாஜக தலைவர் அமீத்ஷா, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய கூட்டம் பானஜி ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இதனையடுத்து, பிரமோத் சாவந்த் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.