கோவா;
கோவா மாநில முதல்வராக மனோகர் பரிக்கர் பதவி ஏற்றார்.
கோவா மாநில தேர்தல் முடிவில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்தது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சகைள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க பாஜ உரிமை கோரியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் மனோகர் பரிக்கரை முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக இன்று காலை இதை உச்சநீதிமன்றம் விசாரித்தது. பதவி ஏற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், வரும் 16ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து கோவா மாநில முதல்வராக மனோகர் பரிக்கர் இன்று மாலை பதவி ஏற்றார். பாலாஜிநகரில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் மிருதுளா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரும் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். விழாவில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.