டெல்லி:
நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுகொண்டார்.
வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத் (மக்களின் குரல்) 67வது நிகழ்ச்சியான, நேற்று (26/07/2020) பிரதமர் மோடி பேசியதாவது,
இன்று கார்கில் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய மண்ணில் மக்களுக்கான உத்வேகத்தை எடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த ஒரு கார்கில் நினைவு தினத்தை அடுத்து நாட்டின் பல முக்கியமான நலன் சார்ந்த விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, பொய்யான தகவல்களை பரப்புவது என்பது நாட்டிற்கு மிகப்பெரிய கேடான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் அதனை செய்ய வேண்டாம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக போகவில்லை. அதற்கு எதிரான போர் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது என்பது கட்டாயம். நிறைய பேர் முகக்கவசத்தை பகழற்றி விடுகின்றார்கள் அல்லது மூக்கில் இருந்தும் வாயிலிருந்து எடுத்து விடுகிறார்கள், அவ்வாறு செய்யக்கூடாது.
8 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர் கள் இந்த முறைகளை பயன் படுத்தி இருப்பதை நாம் பார்க்கின்றோம். எனவே நாம் முகக் கவசத்தை எடுக்கும் சமயங்களில் இவர்களை நினைத்து கொள்ள வேண்டும், இவற்றை நாம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.