புதுடெல்லி:
ள்ளூர் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று 90-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

93-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்ளூர் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கேட்டு கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு செப்-28ஆம் தேதியை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகார் விமான நிலையம் ஷாகீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்தார்.