டெல்லி: கொரோனா பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளதாவது: முதல்கட்டமாக மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களிடம் வாங்கும் சக்தி இருப்பதை நேரடி பண உதவி மூலமாக உறுதி செய்ய வேண்டும்.

2வதாக, அரசு உத்தரவாத கடன்கள் மூலம் தொழில்களுக்கு தேவையான மூலதனம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். 3வதாக, நிறுவன சுயாட்சி மற்றும் நடைமுறைகள் மூலமாக நிதித்துறையை சரி செய்ய வேண்டும்.

1991ம் ஆண்டில் இந்தியா சந்தித்த பொருளாதார நெருக்கடி சர்வதேச காரணிகளால் ஏற்பட்டது. இப்போது காணப்படும் நெருக்கடி எப்போதும் ஏற்பட்டிராத அளவு பெரியது.2ம் உலகப்போரின் போரின் போது உலகம் இப்படி முடங்கவில்லை. கொரோனா பொருளாதார பின்னடைவு எப்போது சீராகும் என்று யாராலும் கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.