டில்லி
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்தியா எடுக்க வேண்டிய மூன்று நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிக் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரிடம் பிபிசி தொலைக்காட்சி பேட்டி காண விரும்பியது. தற்போது கொரோனா பரவல் உள்ளதால் காணொளி மூலம் பேட்டிக்கு அழைத்ததை அவர் மறுத்து விட்டர். அதையொட்டி இ மெயில் மூலம் கேள்விகளுக்கு விடை அளித்தார்.
அவர் தனது பதிலில், ”இந்தியப் பொருளாதார சிக்கலை நீக்கி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர மூன்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதில் முதலாவதாக அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து பாதுகாப்பு நிலைய உறுதி செய்து நேரடி ரொக்க உதவி அளித்து அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும்.
அடுத்ததாக அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்திரவாத திட்டங்களை நிறைவேற்றி தொழில் துறைக்குத் தேவையான மூலதனம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இறுதியாக நிறுவனத் தன்னாட்சி மற்றும் செயல் முறைகள் மூலம் நிதித்துறைக்குக் கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும்.
இந்தியாவில் நோய்த் தொற்று தொடங்கும் முன்பிருந்தே பொருளாதார தேக்கம் உண்டாகி நெருக்கடி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2019-20 ஆம் வருடம் ஜிடிபி வளர்ச்சி 4.2% ஆக கடந்த பத்தாண்டுக் காலத்தில் மிகக் குறைந்த வளர்ச்சியாக இருந்தது. பொருளாதாரம் நீட்டிக்கப்பட்ட கடுமையான முடக்கநிலையில் இருந்து தற்போது மெதுவாக மீண்டு வருகிறது.
அதே வேளையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களின் எதிர்காலம் நிலையில்லாமல் உள்ளது. சென்ற வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்றால் பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது.க் உலக அளவில் கொரொனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
தற்போதைய 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பெருமளவு குறையு என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் கடந்த 1970களுக்கு பிறகு இது மிக மோசமான தேக்க நிலையாக விளக்கும் எனவும் அவர்கள் கூறி உள்ளனர். நான் பொறுப்பில்லாமல் மந்தம் என்னும் வார்த்தையைக் கூற விரும்பவில்லை.
நாட்டில் தீவிரமான மற்றும் நீண்ட காலத்துக்கான பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. இந்த பொருளாதார தேக்கம் மனிதாபிமான நெருக்கடியால் உண்டாகிறது. நாம் இந்த பிரச்சினைகளை பொருளாதார எண்கள் மற்றும் நடைமுறைகளில் அடிப்படையில் மட்டும் பார்க்காமல் சமூக எண்ண அடிப்படையிலும் காண வேண்டும்.
பொருளாதார நிபுணர்களிடம் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிட வேண்டும். ஒருவேளை அது நடந்தால் இப்படி நடப்பது சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இருக்கும்.
மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோன வைரஸ் கட்டுபாடுத்த இந்தியாவில் முடக்க நிலை அமலானது. இது ஆரம்பத்தில் இருந்தே நடந்தது. மேலும் அவசரத்தில் செயல்படுத்தப்பட்டது. எனப் பலரும் விமர்சித்தனர். ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறுவர் என யாரும் முன் கூட்டி ஊகிக்கவில்லை.
இந்தியா மற்ற நாடுகள் செய்ததைத் தானும் செய்தது. ஆனால் அந்த சூழ்நிலையில் ஊரடங்கு அமல் செய்தது தவிர்க்க முடியாத நிலையாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும் அரசின் அதிர்ச்சியூட்டும் மோசமான அணுகுமுறையால் மக்கள் கடும் துன்பத்தில் ஆழ்ந்தனர். இவ்வாறு
திடீரென கடுமையான ஊரடங்கு அறிவித்தது சிந்தனையற்ற புத்திசாலித்தனமில்லாத ஒரு செயல்பாடு ஆகும். இப்போது உள்ளதைப் போல் இரண்டாம் உலகப் போர் நேரத்திலும் அடுத்தடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏப்ரல் மாதம் பல லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. இதில் பல கடன் வசதிகள், வட்டி விகிதம் குறைப்பு கடன் திருப்பி செலுத்தும் அவகாசம் நீட்டிப்பு எனப் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான நிதி உதவி அரசுக்கு எவ்விதம் கிடைக்கும் என்றால் கடன் வாங்குவதாகவே இருக்கும்.
அடுத்ததாக ராணுவம், சுகாதாரம், பொருளாதார சவால்கள் ஆகியவற்றைச் சரிக்கட்ட ஜிடிபியில் இருந்து 10% அவசியம் செலவு செய்ய வேண்டும். இதனால் ஜிடிபிக்கு எதிரான இந்தியாவின் கடன் விகிதம் மேலும் அதிகரிக்கும். அதே வேளையில் கடன் வாங்குவதன் மூலம் உயிர்களைக் காத்து வாழ்வாதாரங்களை மீட்க முடியும் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றால் கடன் வாங்குவதில் தவறில்லை. அந்த கடனை எப்படி பயன்படுத்துகிறோம் எனபதில் கவனம் தேவை.
ஏற்கனவே நாம் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்கி திரும்பச் செலுத்தியதில் நமது செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. இத்தகைய அமைப்புக்களிடம் இருந்து கடன் வாங்குவது நமது பலவீனம் எனப் பொருள் கொள்வது தவறாகும். நாம் நமது பாதுகாப்பைக் காட்ட மாற்ற நாம் மற்ற நாடுகளைப் பின்பற்றி இறக்குமதிக்கு அதிக வரி விதித்து வர்த்தகத் தடைகளை அதிகரித்து விடக் கூடாது.
தற்போது 1990களில் இருந்ததை விட இந்தியா தற்போது பொருளாதாரத்தில் 10 மடங்கு பலம் பொருந்தியதாக உள்ளது. சுமார் 30 கோடிக்கும் மேலானோர் வறுமை நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். ஆகவே இப்போது இந்தியப் பொருளாதாரம் பலமாக உள்ளது. மற்ற நாடுகளின் வர்த்தகம் மட்டுமே இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. இந்தியாவின் ஜிடிபி 5 மடங்கு வளர்ந்ததற்குக் காரணம் உலக பொருளாதார பங்களிப்பு ஆகும்.
தற்போது கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் எவ்வளவு காலம் நீடிக்குமென யாராலும் சொல்ல முடியாது. இந்த நோய் பரவலால் ஒரு அச்சம் உடாகி சமுதாயத்தில் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகி உள்ளது. நிதிக் கொள்கையை ஒரு வழி முறையாகப் பயன்படுத்தி இந்த நெருக்கடியை எதிர் கொள்வது தோல்வியை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.