கொச்சி:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கேரளா மாநிலம் சென்றுள்ளார். அங்கு கொச்சி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

 

அதன் பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள தூய தெரசா கல்லூரியில் நடைபெற்ற இந்திய பொருளாதார கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பணிகளை ராகுல்காந்தி சிறப்பாக செய்து வருகிறார். அவர் தேர்தலுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரது உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால் அரசியல் முடிவுகள் தீர்மானிக்க முடியாதவை.

அதைப்பற்றி சரியாக கூற முடியாது. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மத்திய அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபம் இந்த தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை முன்கூட்டியே என்னால் கூறமுடியாது. என்னால் நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும். நான் ஞானி கிடையாது” என்றார்.