திருவனந்தபுரம்

டிகை கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகை கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.   இது தொடர்பாக மலையாள முன்னணி நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெகு நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார்.  கடந்த ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 11ஆவது குற்றவாளியாக திலிப்பும் இருந்தனர்.

இன்று அங்கமல்லி நீதிமன்றத்தில் புதிய குற்றப் பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.   மற்றும் திலிப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.   இந்த குற்றப் பத்திரிகையில் மொத்தம் 14 குற்றவாளிகளும், 385 சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.   சாட்சிகளில் 50 பேர் திரை உலகப் பிரபலங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.