டில்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர அய்யர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியை, மிகவும் தரம் தாழ்ந்த நிலையில்மணிசங்கர் அய்யர் விமர்சித்திருந்தார்
* பிரதமர் மோடியை ‘நீச்’ என்று இவர் விமர்சனம் செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..இதையடுத்து மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டிலும் “பெண் சக்தி மட்டும் திரண்டெழுந்தால், மோடி மீண்டும் குஜராத்துக்கே ஓடி விடுவார். இன்னும் சற்று முயற்சித்து அவரை கடலில் கொண்டு போய் தள்ளி விட்டால் அந்தப் பெண் சக்தியை நான் மனதார பாராட்டுவேன்” என்று மணிசங்கர் அய்யர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அப்போதே அவர் காங்கிரஸ் தலைமையால் கண்டிக்கப்பட்டார்.
தொடர்ந்து வரம்புமீறி பேசி வந்ததை அடுத்த மணிசங்கர் அய்யர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்.