டெல்லி: மணிப்பூர்  பெண்கள் நிர்வாண ஊர்வலம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள், அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பெண்கள் நிர்வாண ஊர்வலம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து , மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி , இந்த திகிலூட்டும் வீடியோ குறித்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர்,  “நான் வலியால் நிரம்பியுள்ளேன், எந்தவொரு சிவில் சமூகத்திற்கும் இந்த சம்பவம் வெட்கக்கேடானது”‘. “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள், இதற்குப் பின்னால் இருப்பவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் , ” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்,  மணிப்பூரில் பெண்களை உடைத்து அணிவகுத்து நடத்தும் வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது . இதை ஏற்க முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், இந்த விஷயத்தில்,  “நாங்கள் செயல்பட அரசாங்கத்திற்கு சிறிது அவகாசம் கொடுப்போம், இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று நீதிபதிகள் பிஎஸ் நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

இதையடுத்து உள்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரம்மான பத்திரத்தில், பெண்கள் நிர்வாண வீடியோ குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐஎன்டிஐஏ (I..N.D.I.A) எம்பி.க்கள்  மணிப்பூர் சென்று நிலைமையை ஆராய்ந்து ஆய்வு செய்வதாக அங்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து,

இந்த நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உச்சநீதி மன்றத்தில் இன்று மனு அளித்துள்ளனர். மணிப்பூர் பாலியல் வன்முறை வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அதில், ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

ஏற்கனவே மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில்  இரு பெண்களும், தாங்கள் யார் என்பது தெரியக்கூடாது என்ற கண்டிஷனுடன் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.