
கேரள மாநிலத்தில் உள்ள திருப்புனித்துராவை சேர்ந்தவர் மணிகண்டன் ஆச்சாரி. கம்மாட்டிபாடம் என்கிற மலையாள படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அவருக்கும் கேரள மாநிலம் மரடு பகுதியை சேர்ந்த அஞ்சலி என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
26.4.2020 அன்று திருமணத்தை நடத்துவது என்று 6 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் குறித்த தேதியில் கோவிலில் வைத்து அஞ்சலிக்கு இன்று தாலி கட்டினார் மணிகண்டன்.
திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை மணிகணடன் கொரோனா நிதிக்கு கொடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel