சென்னை: பாமக பிளவுபட்டுள்ள நிலையில், பாமகவின் தேரதல் சின்னமான ‘மாம்பழம்’ எனக்கு தான் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்  தேர்தல் ஆணையத்தில்  கடிதம் கொடுத்துள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார போர் இன்று கட்சியை இரண்டாக பிரிய காணமாக உள்ளது. இதனால், பலர் அன்புமணிக்கு ஆதரவாகவும், சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். இதனால், பாமக தலைவராக உள்ள அன்புமணி தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்டி, தன்னை மேலும் 3 ஆண்டுகளாக தலைவராக நீட்டித்தும், அதுதொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி கட்சியின் பெயர், சின்னத்தை கைப்பற்றி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து சின்னம் பெற வேண்டும்.

இந்த நிலையில்  தனது தலைமையின் கீழ் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சியே உண்மை பாமக என்றும், கட்சியின் சின்னமான  மாம்பழம் சின்னத்தை  தனது அணிக்க ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

ஏற்கனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல்தால் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தற்போது தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ஆணையம் அறிவித்திருந்தது.  இதன் காரணமாக பல கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டிய சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில், தனது தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அதன் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் எழுதிய கடிதத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை வேட்பாளர்களின் படிவங்களில் கையொப்பமிட தனக்கே அதிகாரம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளதுடன்,   மேலும் பாமகவின் தலைவராக கடந்த மே 5ம் தேதி முதல் பொறுப்பு வகித்து வருகின்றேன். எனது தலைமையிலான பாமகவிற்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சின்னம் வழங்கப்பட்டதற்கான தகவலை எங்கள் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்