ங்களூரு

ங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரி மாண்ச்விகள் ஹிஜாப் அணிந்து வ்ருவ்தை இந்த்துத்வா மாணவர்கள் எதிர்த்தனர்.  இது பெரிய கலவரமாக மாறியதால் கர்நாடக அரசு ஹிஜாப் உள்ளிட்ட அனைத்து மத உடைகளையும் அணிந்து வரத் தடை விதித்தது.  இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வ்ர அரசு தடை விதித்தது செல்லும் என அறிவித்து மாணவிகள் மனுவை தள்ளுபடி செய்தது.   இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் மங்களூரு நகரில் உள்ள செயிண்ட் ரேமாண்ட் கல்லூரியில் தேர்வு எழுத வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர்.   உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி  அவர்களை ஹிஜாப்பை அகற்ற  வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.  அதற்கு மாணவிகள் மறுத்ததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.