டில்லி

ரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உளார்.

சமீபத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வரும் மேனகா காந்தி, வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மேனகா காந்தி,

”ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். இந்நிருஅனம் கோசாலைகளைப் பராமரித்து பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது.  இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்குச் சென்ற போது பால் கொடுக்காத பசுக்களையோ, கன்றுகளையோ காண முடியவில்லை. 

அவை அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. தனது அனைத்து மாடுகளையும் கசாப்பு கடைக்காரர்களுக்கு இஸ்க்கான் விற்று வருகிறது. அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் இதைச் செய்வதில்லை. தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலை நம்பியிருப்பதாகக் கூறி விட்டு அவர்கள் கசாப்புக்காரர்களுக்கு கால்நடைகளை விற்ற அளவுக்கு யாரும் விற்றிருக்க மாட்டார்கள்”

என்று கூறி உள்ளார்.

இஸ்கான் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஸ்திர் கோவிந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாங்கள் பசுக்களையும் காளைகளையும் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறோம். மேனகா காந்தி கூறுவதுபோல் கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்கப்படவில்லை. இஸ்கான் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளில்கூட பசு பாதுகாப்பில் முன்னோடியாக உள்ளது. மேனகா காந்தி நன்கு அறியப்பட்ட விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் இஸ்கானின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால் அவரது இந்த கருத்து ஆச்சரியம் அளிக்கிறது.” 

என்று தெரிவித்துள்ளார்.