டில்லி:

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பாலியல் பலாத்காரத்தால் பாதித்த சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் வழிவகை உள்ளது. அதேபோல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவர்களுக்கும் இழப்பீடு வழங்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். பாலியல் துன்புறுத்ததால் பாதித்த சிறுவர்கள் குறித்த ஆய்வு நடத்தப்படும். இது சிறுவர்களுக்கு என்று பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் நிவாரணத்தில் பாலின பாகுபாடு கூடாது. சிறுவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அமைதியாகவே இருந்துவிடுகின்றனர். இதில் களங்கம் மற்றும் அவமானம் ஆண்களை சார்ந்தது என்பது தான் இந்த அமைதிக்கு காரணம். இது மோசமான பிரச்னையாகும். இதை கண்டிப்பாக எதிர்கொண்டாக வேண்டும். இதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.