சென்னை: இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் MD (அவசர மருத்துவம் ) பட்ட மேற்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை ச்நதித்தபோது, மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த பட்ட மேற்படிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று MD (அவசர மருத்துவம்) பட்ட மேற்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, பட்ட மேற்படிப்புக்கான ஆணையை வழங்கியதுடன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசியவர், மற்ற 33 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த கட்டமாக பட்ட மேற்படிப்பு தொடங்கப்படும் என்றவர், 85 எம்.டி. அவசர மருத்துவ இடத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் 50 ஆயிரம் இடங்கள் மத்திய அரசும் 50 சதவீதம் மாநில அரசும் நிரப்பும், உலக வங்கயின் 6100 கோடி உதவியுடன் பட்ட படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இந்த படிப்பு தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மாண்டஸ் புயல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்தவர், மாண்டல் புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றவர், மழையை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.