சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தென்னக ரயில்வேறு அறிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக  கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 17ந்தேதி முதல் மண்டல பூஜை நடைபெறுகிறது. இதை யொட்டி  சுமார் 1 மாதம் காலம் கோவல் நடை திறந்திருக்கும், டிசம்பர் 27-ம் தேதி  மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்,  சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.  சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இ இந்த சமயத்தில் கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரோதம் எடுத்து மலைக்கு சென்று வருவார்கள். இந்த நிலையில், சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழநாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்! தேவசம் போர்டு தகவல்…

சபரிமலை மண்டல பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரெயிலை இயக்குகிறது தெற்கு ரெயில்வே…