சிவகங்கை,

மிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, இளவட்டக்கல் தூக்குதல், கபடி, நீச்சல் போட்டி போன்ற பாரம்பரியம் மிக்க விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேசிராவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடந்தது.

இந்த வீரமிகு போட்டியில்  நூற்று கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதை காண நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்.

போட்டி தொடங்கியதும் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது சிலை காளைகள் பார்வையாளர்கள் மீது பாய்ந்தது. இதில் மாடி முட்டியதில 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது.