திருக்குவளையில் இருந்து 3.கி.மீ. தொலைவில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. கரிக்குருவி சிறிய உருவம் கொண்டது. முன்ஜன்ம வினை பயனால் அடுத்த ஜன்மத்தில் கரிக்குருவியாக பிறந்தது . முனிவர் ஒருவரின் அறிவுரை படி மதுரை மீனாக்ஷி அம்மன் சமேத சொக்கநாதரை தரிசித்து பின்னர் இந்த கோயில் இறைவனை தரிசித்தது . கரிக்குருவியின் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் கரிக்குருவிக்கும் அதன்சந்ததிக்கும் வலிமை அளித்ததால் குருவிக்கு வலியன் என்று பெயர்வந்தது சூரியனும், காரணரிஷியும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப்பக்கம் தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று.
இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர். அவரை பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை முதலில் பாடிய பிறகுதான் ஓதுவார்கள் மற்ற பாடல்களை பாடுவார்கள்.