டெல்லி கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்ற கோரிக்கை

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தீபக் தன்வார் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தீபக் தன்வார்   ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், டெல்லியில் உள்ள பிரபலமான கான் மார்க்கெட்டுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த மார்கெட்டுக்கு வால்மீகியின் பெயரை சூட்டவேண்டும். வால்மீகிக்கு பெரிய வரலாறு உண்டு.
இந்த பெரிய மார்க்கெட்டுக்கு வால்மீகி பெயரை வைத்தால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவரைப் பற்றி தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: mythological past, கான் மார்க்கெட்
-=-