‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு  ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி

கொத்து கொத்தாக ஆட்களை அள்ளிச்செல்லும் கொரோனாவுக்கு உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ இந்தியா முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த மையத்தின் ‘ஹெல்ஃப் லைன்’’ கிட்டத்தட்ட உயிர் காக்கும்  ஆயுதம்.

உ.பி.மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஒரு அடாவடி பேர்வழி, அந்த ஹெல்ஃப் லைனில்’ தொடர்பு கொண்டு பேசினான்,

பதறி அடித்து மறுமுனையில் இருந்த பணியாளர் போனை எடுக்க ‘’சார் .. நாலு சமோசா’’ என்று ஆர்டர் செய்துள்ளான் , அந்த ஆசாமி.

‘’இது ஹெல்ஃப் லைன்’’ என்று பலமுறை ஊழியர்கள் சொல்லியும், அந்த ஆசாமி கேட்காமல் ‘’ நாலு சமோசா.. நாலு சமோசா’’ என்று ஆர்டர் கொடுத்த வண்ணம் இருந்தான்.

விஷயம் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சனேய குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் ஒரு ஐடியா செய்தார்.

ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில்-

அந்த ஆசாமியின் இருப்பிடம் கண்டு பிடிக்கப்பட்டு, அவன் கேட்ட மாதிரி நான்கு சமோசா ’சப்ளை’ செய்யப்பட்டது.

சாப்பிட்டான்.

பின்னர் அவன் கையில் துடைப்பம் தரப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள சாக்கடையைச் சுத்தம் செய்யுமாறு அதிகாரிகள் பணித்தனர்.

வேறுவழி இன்றி அவனும் சாக்கடையைச் சுத்தம் செய்தான்.

,அந்த ஆசாமி சாக்கடையைச் சுத்தம் செய்யும் புகைப்படத்தோடு, இந்த தகவலை ஆட்சியர், தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆட்சியருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இப்படி எல்லாம் சின்ன தண்டனை கொடுத்தால் அவன் எப்படித் திருந்துவான்? என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

–  ஏழுமலை வெங்கடேசன்