அகமதாபாத்: பொது இடத்தில் பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, அகமதாபாத்தில் ஒரு நபருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இந்தவகையில் விதிக்கப்பட்ட முதல் அபராதம் இதுதான் என்று அகமதாபாத் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் சிலை சாலையின் அருகே, பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, மகேஷ் குமார் என்ற நபருக்கு, சிசிடிவி காட்சியின் ஆதார அடிப்படையில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

பொது சுகாதார சட்டத்தை மீறியதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியளவிலான சுகாதார சர்வேயின் அடிப்படையில், நாட்டிலேயே சுத்தமான நகரமாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தது அகமதாபாத் என்பது குறிப்பிடத்தக்கது.