டெல்லி அருகே நோய்டாவில் ஆஷிஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தனது ஐ-20 காரை பறித்துச் சென்றதாக போலீசில் புகாரளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் செக்டர் 71 ல் வரும்போது தனது காரை வழிப்பறி செய்ததாக ஆஷிஷ் கூறியுள்ளார், விசாரணையின் போது அவர் போதையில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
போதை ஆசாமி கூறிய இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசாருக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை
பொழுது விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஆஷிஷ், தனது காரை செக்டர் 120 ல் உள்ள பார்க்கிங்கில் நிறுத்திவைத்ததாக கூறினார்.
பின்னர் அவருக்கு போலீசார் உரிய அறிவுரையை வழங்கியதோடு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து காரை எடுத்துச் செல்ல உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உரிய பேப்பர்களை எல்லாம் காண்பித்து போலீசில் கொடுத்த புகாரை திரும்ப வாங்கிக் கட்டிக்கொண்டு சென்றார்.