ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபல செய்தியாளர் பீட்டர் லலோர், ஆஷஸ் கிரி்க்கெட் தொடர் குறித்த செய்திகளை பதிவு செய்ய இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கே மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பீர் அருந்திய அவர் அதற்கான பில்லை பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் .

அதில் அவர் அருந்திய பீரின் விலை இந்திய மதிப்பில் 48 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. தனது டெபிட் கார்ட் மூலம் பணத்தை கட்டிய பிறகு பில்லை பார்த்த அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.

உடனே அவர் புகார் கொடுக்கவே தவறாக பில் கொடுத்ததற்கு ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்டு , அவர் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் அவருக்கு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .

இது குறித்து லாலோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீர் பாட்டிலின் படத்தைப் பகிர்ந்து, “இந்த பீரை பார்க்கிறீர்களா? இது வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பீர் ஆகும். மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலில் 99,983.64 டாலர் செலுத்தினேன். உண்மையாகத்தான்” என்று பதிவிட்டுள்ளார்.