சென்னை: துபாயில் இருந்து தமிழகம் வந்த வாலிபர் ஒருவர், கொரோனா தடுப்பு பாதுகாப்புக்காக உபயோகப்படுத்தும் முக்கவசம் (மாஸ்க்) உள்ளே தங்கம் வைத்து கடந்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற நபர் பிளை துபாய் விமானம் மூலம் சென்னை வந்தார். அவரது நடவடிக்கையை கண்காணித்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினார். ஆனால், அவரிடம் எந்தவித பொருளும் சிக்காத நிலையில், அவர் அவசரம் அவசரமாக பதட்டத்துடன் வெளியேற முயன்றார். இதனால், அவர் மீது மீண்டும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கினர். அவரது உடமைகளை பிரித்து மேய்ந்தானர்.
அவரது முகக்கவசத்தையும் அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் கொரோனாவை காரணம் காட்டி, மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயகமாக அதை அகற்றிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த முகக்கவசம் கணமாக இருந்தால், அதை பிரித்து ஆய்வு நடத்தினர். அப்போது, முக்கவசத்தின் லேயர்களுக்குள் தக்கத்திலான மெல்லி பிளேட் போன்று தங்க பசை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தங்கப்பசையின் எடை 65 கிராம் என்றும், இதன் மதிப்பு ரூ.3லட்சம் என்று கூறிய அதிகாரிகள், முகமது அப்துல்லாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து பயன்படுத்திய ஐ போன்கள், பயன்படுத்திய மடிக்கணினிகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டது. இதன் மொத்தம் மதிப்பு ரூ 11.13 லட்சம் என கூறப்படுகிறது.