டில்லி:
மத்திய அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் விசாரணைக்கு வர மறுத்த கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சிபிஐ மூலம் மாநில அரசை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி தர்ணா ஈடுபட்டு வருகிறார். வரும் 8-ம் தேதி வரை தனது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்றிரவு கொல்கத்தாவுக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.